வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By anandakumar
Last Modified: வியாழன், 28 நவம்பர் 2019 (21:44 IST)

கல்விச்சீர் வழங்கும் விழா... சமுதாய காய்கறி தோட்டம் துவக்க விழா ...மக்கள் ஆர்வம் !

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கடவூர் வட்டம், வரவனை கிராமம், வ.வேப்பங்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் முப்பெரும் விழா நிகழ்ச்சியில் கல்விசீர் திருவிழா, மரம் நடுவிழா மற்றும் சமுதாய காய்கறி தோட்டம் துவக்க விழா நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியின் தொடக்கமாக ஊர் பொதுமக்கள் சார்பாகவும், அமெரிக்கா வாழ் பகுதியில் வசிக்கும் இந்த ஊரை சார்ந்த நரேந்திரன் கந்தசாமி ஒருங்கிணைப்பில் அரசுப்பள்ளிக்கு பொதுமக்கள் சார்பில் நோட்டுகள், புத்தகங்கள், கேரன்போர்டு, கம்யூட்டர் சாதனங்கள் சிறப்பாக செயல்பட்ட பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விருதுகள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியினை தொடர்ந்து மரக்கன்றுகளும், சமுதாய காய்கறி தோட்டம் துவக்க விழாவும் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முதன்மை விருந்தினர்களாக சார்புநீதிபதி சட்டப்பணிகள் இயக்ககம், நீதியரசர் மோகன்ராம், கரூர் மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் ஜெரால்டு ஆரோக்கியராஜ் உள்ளிட்டோர் முதன்மை விருந்தினர்களாக கலந்து கொண்டு, அரசுப்பள்ளியின் புகழ் குறித்து விவரித்தனர்.

முன்னதாக ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியின் தலைமையாசிரியர் கா.தர்மராஜ் அனைவரையும் வரவேற்றார்.