வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By anandakumar
Last Modified: புதன், 27 நவம்பர் 2019 (21:32 IST)

கரூர் காங்கிரஸ் எம்.பி யின் தீவிர ஆதரவாளரும், காங்கிரஸ் வட்டார தலைவரின் கஞ்சா தோட்டம்

கரூர் மாவட்டம் கடவூர் ஒன்றியம் மைலம்பட்டி வடக்கு பகுதியில் குளித்தலை சாலையில்  அமைந்துள்ள மாந்தோப்பில், நிலம் உரிமையாளர் மைலம்பட்டி பகுதியை சார்ந்த நிஜாம் என்பவரிடமிருந்து காங்கிரஸ் பிரமுகர் அருணாச்சலம் என்பவர் அங்குள்ள ஒன்னரை ஏக்கர் விவசாய நிலத்தை குத்தகைக்கு எடுத்துள்ளார். 
குத்தகைக்கு எடுத்து அதில் கஞ்சா பயிரிட்டு வளர்த்து வந்த நிலையில் காவல்துறைக்கு கிடைத்த ரகசிய தகவல் கிடைத்ததன் பேரில் அங்கு விசாரணை நடத்திய காவல்துறையினர் கஞ்சா பயிர் என்பது  என கண்டறிந்தனர்.

சம்பவ இடத்திற்கு காவல்துறை எஸ்பி பாண்டியராஜன் திருச்சி எஸ்.பி உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர் மேலும் இச்சம்பவத்தில் தொடர்புடைய நபர்களையும் மற்றும் அந்த கஞ்சா செடியின் அது பற்றியும் ஆலோசித்து வருகின்றனர்.

மேலும், காங்கிரஸ் பிரமுகரான அருணாச்சலம் வட்டார தலைவர் என்பதும், இவர் கரூர் காங்கிரஸ் எம்.பி யின் தீவிர விசுவாசியும் ஆவார் என்பதினால் காங்கிரஸ் மேலிட வட்டார அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது