ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 20 டிசம்பர் 2023 (16:28 IST)

மழை நின்றாலும் தொடரும் மீட்புப்பணியால் நாளையும் விடுமுறை: கலெக்டர் அறிவிப்பு..!

திருநெல்வேலி உட்பட தென் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது என்பதும் இதனால் லட்சக்கணக்கான பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர் என்பதையும் பார்த்தோம்.

மேலும் பல இடங்களில் இன்னும் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதால் மீட்பு படையினர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இருப்பினும் திருநெல்வேலி உள்பட ஒரு சில பகுதிகளில் மீட்பு பணி செய்த பின்னர் மின் இணைப்பும் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது

இந்த நிலையில் தற்போது மழை நின்று விட்ட நிலையில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் திருநெல்வேலியில் மாவட்டத்தில் உள்ள  பள்ளிகளுக்கு மட்டும் நாளை அதாவது டிசம்பர் 21ஆம் தேதி விடுமுறை என நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் அறிவித்துள்ளார்.

தூத்துக்குடி மற்றும் திருச்செந்தூர் பகுதிகளில் நாளை விடுமுறை குறித்த அறிவிப்பு வெளிவருமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Edited by Mahendran