ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: புதன், 20 டிசம்பர் 2023 (12:58 IST)

மக்களுக்கு 10 ஹெலிகாப்டர்கள் மூலம் உணவு வழங்கப்பட்டு வருகிறது- தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா

flood
தென் மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக ஏராளமான சேதம் ஏற்பட்டுள்ள  நிலையில் மீட்பு படையினர் அவர்களை மீட்டு வருகிறது. தமிழக அரசு மக்களுக்குத் தேவையான   மீட்பு மற்றும் நிவாரண உதவிகள் துரிதமாகச் செய்து வருகிறது.

இந்த நிலையில், மீட்பு மற்றும் நிவாரண பணிகளை  விரைவுப்படுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாக  தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார்.

தற்போது செய்தியாளர் சந்திப்பின்போது அவர் கூறியுள்ளதாவது:

நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுவர்களுடன் முதல்வர் நேரடியாகப் பேசி பாதிப்புகளை கேட்டறிந்தார்.

ஸ்ரீவைகுண்டத்திலேயே உணவு சமைத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தென்மாவட்டங்களில் தண்ணீர் தேங்கியுள்ள பகுதிகளில் விரைவாக மின் விநியோகம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்துள்ளார்.

மேலும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 10 ஹெலிகாப்டர்கள் மூலம் உணவு வழங்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்துள்ளார்.