வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 20 பிப்ரவரி 2023 (20:26 IST)

செல்வமகள் சேமிப்பு திட்டம்.. புதுச்சேரி முதல்வரின் அறிவிப்பால் மகிழ்ச்சியில் பெற்றோர்..!

selvamagal
செல்வமகள் சேமிப்பு திட்டம்.. முதல்வரின் அறிவிப்பால் மகிழ்ச்சியில் பெற்றோர்..!
பெண் குழந்தைகளுக்கான செல்வமகள் சேமிப்பு திட்டத்தை பெற்றோர் தொடங்கும் போது புதுச்சேரி அரசு ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்த முடிவு செய்துள்ளதாக புதுவை முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். 
 
இதுகுறித்து இன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முதல்வர் ரங்கசாமி மகளை காப்போம் மகளுக்கு கற்பிப்போம் என்ற திட்டம், மகளுக்கு தெரிய வேண்டும் என்றும் பெண் குழந்தைகள் பிறந்தால் திருமணத்திற்கு என்ன செய்வது என்று கருதி பயந்த சூழல் தற்போது மாறிவிட்டது என்றும் செல்வ மகள் சேமிப்பு திட்டம் பெற்றோர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக இருக்கிறது என்றும் தெரிவித்தார். 
 
பெற்றோர்கள் பெண் குழந்தைகளுக்கு செல்வமகள் சேமிப்பு கணக்கு தொடங்கும்போது கூடுதலான ஒரு தொகையை புதுச்சேரி அரசு செலுத்த முடிவு செய்துள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து பெண் குழந்தைகள் வைத்திருக்கும் பெற்றோர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 
Edited by Mahendran