திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: திங்கள், 1 பிப்ரவரி 2021 (15:30 IST)

கொலை செய்யப்பட்ட எஸ்.ஐ குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் நிதி உதவி - முதல்வர்

குடித்துவிட்டு தகராறு செய்தவர்களை தட்டிக் கேட்ட உதவி ஆய்வாளர் கொலை செய்யப்பட்டார். இந்நிலையில், கொலை செய்யப்பட்ட உதவி ஆய்வாளர் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் நிதியும், அரசு வேலையும் வழங்குவதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஆய்வாளராக பணிபுரிந்து கொண்டு இருந்தவர் பாலு. இவர் இன்று மினி லாரி ஏற்றி கொலை செய்யப்பட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஏரல் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பாலு என்பவர் வாழவல்லான் அருகே குடித்துவிட்டு தகராறில் ஈடுபட்டவர்களை தட்டிக்கேட்டதாக தெரிகிறது இதனால் ஏற்பட்ட விபரீதம் காரணமாக அவர் மினி லாரி ஏற்றி கொலை செய்யப்பட்டுள்ளார்.

54 வயதான உதவி ஆய்வாளர் பாலு அவர்ககளை மினி லாரி ஏற்றி கொலை செய்த முருகவேல் என்பவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இது குறித்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து  தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

இந்நிலையில், பணியில் இருக்கும்போது, கொலை செய்யப்பட்ட காவல்  உதவி ஆய்வாளர் பால் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் நிதியும், அரசு வேலையும் வழங்குவதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.