செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : சனி, 30 ஜனவரி 2021 (18:23 IST)

பணமும் பிரியாணியும் எங்கே… முதல்வர் கூட்டத்துக்கு வரவழைக்கப்பட்டவர்கள் கூச்சல்!

தமிழக முதல்வர் கலந்து கொண்ட கூட்டத்தில் பணமும் பிரியாணியும் வேண்டும் என்று வந்தவர்கள் கேட்டதால் சலசலப்பு உண்டானது.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடம் திறப்பு, சிலை திறப்பு என அதிமுக பிஸியாக இயங்கி வருகிறது. இந்நிலையில் மதுரை திருமங்கலம் அருகே உள்ள டி.குன்னத்தூரில் ஜெயலலிதாவுக்காக 12 ஏக்கரில் கோவில் கட்டப்பட்டுள்ளது. இன்று அந்த கோவிலை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்கும் நிலையில் கோபுர கலசங்களுக்கு யாகசாலை பூஜை நடத்தி புனித நீர் தெளிக்கப்படது.

இதற்காக அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து ஆட்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். ஆனால் கூட்டம் முடிந்தும் தங்களுக்கு பணமும் பிரியாணியும் வழங்கப்படவில்லை என அதில் சிலர் கேட்டு கூச்சல் போட்டதால் சலசலப்பு உருவானது.