செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Papiksha Joseph
Last Updated : வியாழன், 30 செப்டம்பர் 2021 (18:53 IST)

ஊரக உள்ளாட்சித் தேர்தல்: இதுவரை ரூ.33.90 லட்சம் பறிமுதல்!

தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இருகட்டமாக நடைபெற உள்ளது. இந்நிலையில் தேர்தல் நடைபெறும் 9 மாவட்டங்களில் இதுவரை ரூ.33.90 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 
 
செப்.18 முதல் 28 வரை 9 மாவட்டங்களில் 16.40 கிலோ சந்தனக் கட்டைகளும் பறிமுதல் பறிமுதல் செய்யப்பட்டதோடு100 மின் விசிறிகள், 215 புடவைகள்,1065 துண்டுகள், 250 பித்தளை விளக்குகள் மற்றும் 600 குங்கும சிமிழ்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.