1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 30 செப்டம்பர் 2021 (18:24 IST)

100 நாள் வேலை திட்டத்தை ஒழிக்க வேண்டும்: சீமான்

நூறு நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தை நீடிக்க வேண்டும் என ஒரு சில அரசியல் கட்சிகள் கூறிவரும் நிலையில் விவசாயத்தை காப்பாற்ற வேண்டுமானால் நூறு நாள் வேலைத்திட்டத்தை ஒழிக்க வேண்டுமென நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி அளிப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் என்ற பகுதியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் சீமான் தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை மத்திய அரசு மதிப்பதில்லை என்று குற்றஞ்சாட்டினார்
 
மேலும் விவசாயத்தை காப்பாற்ற வேண்டுமானால் 100 நாள் வேலைத்திட்டத்தை ஒழிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அவருடைய இந்த கருத்துக்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது