வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 8 ஜனவரி 2021 (17:28 IST)

முதல்வருக்கும் ஆளுனருக்கும் ரூ.201 பொங்கல் பரிசு அனுப்பிய சமூக அமைப்பு!

முதல்வருக்கும் ஆளுனருக்கும் ரூ.201 பொங்கல் பரிசு அனுப்பிய சமூக அமைப்பு!
அண்டை மாநிலமான தமிழகத்தில் பொங்கல் பரிசு ரூபாய் 2500 வழங்கப்பட்டிருக்கும் நிலையில் புதுச்சேரியில் ரூபாய் 200 மட்டுமே பொங்கல் பரிசு வழங்குவதா? என கண்டித்து புதுவை முதல்வர் மற்றும் புதுவை ஆளுநருக்கு ரூபாய் 201 பொங்கல் பரிசாக சமூக அமைப்பு அமைப்பைச் சேர்ந்தவர்கள் அனுப்பி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
தமிழகத்தில் பொங்கல் பரிசாக ரூபாய் 2500 வழங்குவதாக தமிழக அரசு சமீபத்தில் அறிவித்ததை அடுத்து கடந்த திங்கள் முதல் அந்த பணம் வழங்கப்பட்டு வருகிறது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் சமீபத்தில் புதுவையில் ரூபாய் 200 பொங்கல் பரிசு வழங்க ஆளுநர் கிரண்பேடி ஒப்புதல் அளித்தார் 
 
இந்த நிலையில் அண்டை மாநிலத்தில் 2500 பொங்கல் பரிசு வழங்கப் பட்டிருக்கும் நிலையில் புதுவை மாநிலத்தில் ரூ 250 மட்டும் தான் பொங்கல் பரிசா? என அம்மாநில மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர் 
 
இதனை அடுத்து புதுவை மாநிலத்தை சேர்ந்த சமூக அமைப்பு ஒன்று பொங்கல் பரிசாக கிடைத்த 200 ரூபாய் உடன் மேலும் ஒரு ரூபாய் சேர்த்து வைத்து ரூபாய் 201ஆக அம்மாநில முதல்வர் நாராயணசாமி மற்றும் ஆளுநர் கிரண்பேடி ஆகிய இருவருக்கும் அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது