திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 20 ஜூலை 2023 (08:23 IST)

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2,000 வழங்கும் திட்டம்: தொடங்கி வைத்தார் முதல்வர்..!

தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு  மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில் கர்நாடக மாநிலத்தில் மாதம் 2000 ரூபாய் குடும்பத் தலைவிகளுக்கு வழங்கும் திட்டத்தை அம்மாநில முதல்வர் சித்தராமையா தொடங்கி வைத்துள்ளார் 
 
கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்த நிலையில் அக்கட்சி கொடுத்த வாக்குறுதிகளில் ஒன்றான குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூபாய் 2000 வழங்கும் கிரகலட்சுமி திட்டத்தை தொடங்குவதற்கான ஏற்பாடுகள் கடந்து சில நாட்களாக நடந்து வந்தது. 
 
இந்த நிலையில் கர்நாடக முதல்வர் சித்தராமையா இன்று இந்த திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.  இதனை அடுத்து விரைவில் அம்மாநிலத்தில் உள்ள குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூபாய் 2000 கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva