வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : புதன், 19 ஜூலை 2023 (20:02 IST)

குழந்தைகள் கல்வி பயில ரூ.3 லட்சம் வசூல்…நடிகர் சிவக்குமார் வேதனை

SHIVAKUMAR
குழந்தைகள் கல்வி பயிலுவதற்கு தனியார் பள்ளிகளில் ரூ. 3 லட்சம் வரை கட்டணம் வசூலிக்கப்படுவதாக நடிகர் சூர்யாவின் தந்தை சிவக்குமார் கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவின் மூத்த நடிகரும் பேச்சாளருமான சிவக்குமார் இன்று கோவை மாவட்டம் சூலூர் அடித்த அரசூர் பள்ளியின் 60வது ஆண்டு விழாவில் கலந்து கொண்டார்.

அப்போது நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சிவக்குமார், அரசு பள்ளிகள் அனைத்து வசதிகளையும் கொண்டிருக்கிறது.  நாங்கள் படிக்கும்போது அந்த வசதிகள் எதுவும் இல்லை. தற்போது, குழந்தைகள் கல்வி பயில ரூ. 3 லட்சம் வரை வசூலிக்கப்படுகிறது.

தனியார் பள்ளிகளில் பிரீ கேஜி வகுப்பில் சேர ரூ.2 லட்சம் வரை வசூலிக்கப்படுகிறது. நடிகர் கார்த்தி குழந்தையை  பள்ளியில் சேர்க்க இதுபோல் கட்டணம் செலுத்தப்பட்டது என்று தெரிவித்துள்ளார்.

மேலும், திருக்குறள் திராவிட மொழியில் உள்ளது. ஆனால், இதைக் கண்டுபிடித்தது ஆங்கிலேயர் என்று கூறினார்.