1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Rs.150 crore value statues recovered by IG Ponmanickavel

90 நாட்களில் ரூ.150 கோடி மதிப்பிலான சிலைகள் மீட்பு: ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் அதிரடி

சிலை மீட்பு
சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜியாக பொன் மாணிக்கவேல் அவர்கள் பதவியேற்றவுடன் பல அதிரடி நடவடிக்கைகள் எடுத்து கொண்டு வரப்படுகிறது என்பது தெரிந்ததே. குறிப்பாக பழனி கோவிலில் நடந்த முறைகேடுகளை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தவர் இவர்தான் என்பதால் மக்கள் மத்தியில் இவருக்கு நல்ல பெயர் உண்டு.
 
இந்த நிலையில் சுமார் 60 வருடங்களுக்கு முன்பு திருட்டுப்போன தஞ்சை பெரிய கோயில் சிலைகள் ஐஜி பொன்மாணிக்கவேல் அவர்களின் அதிரடி நடவடிக்கையால் மீட்கப்பட்டுள்ளன. ரூ.150 கோடி மதிப்பிலான ராஜராஜசோழன் மற்றும் லோகமாதேவி சிலைகள் சுமார் 60 வருடங்களுக்கு முன் திருடு போன நிலையில் இந்த சிலைகள் தற்போது குஜராத்தில் மீட்கப்பட்டது
 
இந்த சிலைகள் காணாமல் போனதாக வழக்கு பதியப்பட்ட 90 நாட்களில் ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் தலைமையிலான குழு எடுத்த அதிரடி நடவடிக்கையின் மூலம் இந்த சிலைகள் மீட்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மீட்கப்பட்ட சிலைகள் ரயில் மூலம் நாளை சென்னை வந்தடையும் என தகவல்கள் கூறுகின்றன. இன்னும் தமிழ்நாட்டின் கோடிக்கணக்கான சிலை பொக்கிஷங்கள் வெளிநாடு உள்ளிட்ட பல இடங்களுக்கு கடத்தப்பட்டதாக கூறப்படுவதால் ஐஜி பொன்மாணிக்கவேல் அவர்களின் குழு அனைத்து சிலைகளையும் மீட்கும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது.
அடுத்த கட்டுரையில்
இன்று பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவு: மாணவர்கள் ஆர்வம்