வியாழன், 30 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 30 ஜனவரி 2025 (08:59 IST)

சுய உதவி குழுக்களுக்கு ரூ.15 லட்சம்.. ஒரு நபருக்கு ரூ.1.25 லட்சம்..! - விண்ணப்பிப்பது எப்படி?

Magalir suya udhavi kuzhu kadan

தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.15 லட்சம் வரை கடனுதவி வழங்கும் திட்டம் செயல்பாட்டில் உள்ளது. தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதா மேம்பாட்டு கழகம் சார்பில் வழங்கப்படும் இந்த கடன் உதவியை பெற பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் உள்ளிட்ட பிரிவுகளை சேர்ந்தவர்கள் தகுதி பெற்றவர்களாவர்.

மகளிர் குழு தொடங்கி 6 மாதங்கள் பூர்த்தியடைந்திருந்தால் இந்த திட்டத்தில் விண்ணப்பிக்கலாம். குழுவில் அதிகபட்சம் 20 பேர் வரை இருக்கலாம். மொத்த கடன் ரூ.15 லட்சமாகவும், தனிநபர் கடன் அதிகபட்சம் ஒரு நபருக்கு ரூ.1.5 லட்சமாகவும் வழங்கப்படுகிறது. இந்த கடனை திரும்ப செலுத்த இரண்டறை ஆண்டுகள் அவகாசம் உண்டு. இதற்கு ஆண்டு வட்டி 6 சதவீதம் வசூலிக்கப்படுகிறது.

 

இந்த கடனுதவியை பெற ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். பிறப்பு சான்றிதழ், சாதி, வருமான சான்றிதழ், ரேசன் கார்டு, ஆதார் அடையாள அட்டை உள்ளிட்ட சான்றுகள் தேவை. குழு கடன் பெற தகுதி வாய்ந்த நபர்கள் கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் அலுவலகம், மத்திய, நகர கூட்டுறவு வங்கிகள், கூட்டுறவு கடன் சங்கங்கள் ஆகிய இடங்களில் கடனுக்கு விண்ணப்பிக்கலாம். www.tabcedco.tn.gov.in மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம், கூடுதல் தகவல்களையும் அறிந்து கொள்ளலாம்.

 

Edit by Prasanth.K