1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 12 மே 2020 (17:55 IST)

சென்னையின் 690 தெருக்களில் கொரோனா!!!

சென்னையில் கொரோனா பாதித்த தெருக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
கொரோனா பாதிப்பினால் தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் சென்னையில் கொரோனா பாதிப்புகள் அதிகமாக உள்ளது. இதுவரை சென்னையில் 587 பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. 
 
இந்த வாரத்துடன் ஊரடங்கு முடிவடையலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில் சென்னையில் கொரோனா பாதிப்பினால் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் பரப்பலவை குறைக்கவும், குறிப்பிட்ட பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகப்படுத்தவும் சென்னை மாநகராட்சி முடிவெடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுன.
 
ஆனால் தற்போது கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் அதிகரிப்பட்டுள்ளது. சென்னையில் 690 தெருக்களில் கொரோனா பாதிப்பு உள்ளது. எனவே சென்னையில் கொரோனா பாதித்த தெருக்கள் 690 ஆக அதிகரித்த நிலையில் அவை தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.