ஓபிஎஸ் - ஈபிஎஸ் ஆதரவாளர்கள் ஆஜராக சம்மன்: ராயப்பேட்டை காவல் நிலையம் அதிரடி
ராயப்பேட்டை காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என ஓ பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
அதிமுக தலைமையகத்தில் கடந்த 11ஆம் தேதி நடந்த கலவரம் தொடர்பாக விசாரணை செய்யவே இந்த சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிகிறது
நாளை ஓ பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் ஆஜராக வேண்டும் என்றும் நாளை மறுநாள் எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் ஆஜராக வேண்டும் என்றும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது
இந்த சம்மனில் ஆஜராகும் ஓபிஎஸ் இபிஎஸ் ஆதரவாளர்களிடம் விசாரணை செய்த பின்னரே கைது நடவடிக்கை குறித்து தகவல் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.