செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 17 ஜூலை 2022 (08:32 IST)

இன்று அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்: புதிய எதிர்க்கட்சி துணைத்தலைவர் தேர்வா?

ADMK
இன்று அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற இருப்பதாகவும் அதில் புதிய எதிர்க்கட்சித் துணைத் தலைவர் தேர்வு நடைபெற இருப்பதாக கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
அதிமுகவில் கடந்த சில நாட்களாக ஓபிஎஸ், ஈபிஎஸ் என்ற பிரிவு ஏற்பட்டுள்ள நிலையில் ஓபிஎஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் இலிருந்து விலக்கப்பட்டுள்ளார்.
 
இந்த நிலையில் அவர் அதிமுகவின் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவியில் இருக்கும் நிலையில் இன்று அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெற உள்ளது
 
இந்த கூட்டத்தில் புதிய அதிமுக எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவியில்  இருக்கும் ஓபிஎஸ் நீக்கப்படுவார் என்றும் புதிய எதிர்க்கட்சி துணைத்தலைவர் தேர்வு செய்யப்படுவார் என்றும் கூறப்படுகிறது
 
மேலும்  நடைபெறும் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் ஓபிஎஸ் தரப்பிற்கு ஆதரவாக எம்எல்ஏக்கள் கலந்து கொள்வார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்