திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : சனி, 27 ஜூலை 2024 (12:36 IST)

நிதி ஆயோக் கூட்டத்தில் பாராபட்சம்.! மம்தா பானர்ஜி வெளிநடப்பு..!!

Mamtha
5 நிமிடத்திற்கு மேல் என்னை பேசவிடவில்லை என கூறி பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்று வரும் நிதி ஆயோக் கூட்டத்திலிருந்து மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி வெளிநடப்பு செய்தார். 
 
பிரதமர் மோடி தலைமையிலான நிதி ஆயோக் கூட்டம், டில்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் தற்போது நடைபெற்று வருகிறது. மத்திய பட்ஜெட்டில், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் வஞ்சிக்கப்பட்டதாகக் கூறி, இந்தியா கூட்டணி கட்சிகள் ஆளும் மாநில முதல்வர்கள், நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்தனர். 
 
ஆனால் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி மட்டும் இந்த கூட்டத்தில் பங்கேற்றார். கூட்டம் தொடங்கி சிறிது நேரத்திலேயே அவர் வெளிநடப்பு செய்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மம்தா பானர்ஜி, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் இருந்து பங்கேற்ற ஒரே முதலமைச்சர் நான் மட்டுமே என்றார். 


நிதி ஆயோக் கூட்டத்தில் பாரபட்சம் காட்டுவதாகவும், ஐந்து நிமிடங்களுக்கு மேல் என்னை பேச விடவில்லை எனவும் குற்றம் சாட்டினார். அதனாலேயே நிதி ஆயோக் கூட்டத்திலிருந்து மம்தா பானர்ஜி வெளிநடப்பு செய்தார்.