போலீஸுக்கு டிமிக்கி கொடுத்த ’ ரவுடி’ துப்பாக்கி முனையில் கைது

binu
Last Updated: செவ்வாய், 19 மார்ச் 2019 (16:28 IST)
கடந்த வருடம் சென்னையில் உள்ள முக்கியமான இடத்தில் பிரபல ரவுடிகள் கூடு பினுவின் பிறந்த நாளை விமரிசையாக கொண்டாடும் போது போலீஸார் சுற்றி வளைத்து முக்கிய ரவுடிகளை கைது செய்தனர். அப்போது ரவுடி பினு  தப்பிச் சென்றார். பின்ன சில நாட்களுக்குப் பிறகு அம்பத்தூர் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். 
ஆனால் போலீஸார் காவல் நிலையத்திற்கு வந்து தினமும் கையெழுத்து போட வேண்டும் என்ற நிபந்தனை ஜாமீனில் வெளிவந்தார். ஆனால் திடீரென்று காவல் நிலையத்திற்கு வராமல் போலீஸுக்கு டிமிக்கி கொடுத்துள்ளான்.
 
இந்நிலையில் பல இடங்களில் போலீஸார் பினுவை தேடி வந்தனர்.
 
இந்நிலையில் சென்னையில் உள்ள ரவுடிகளை ஒடுக்கும் பணியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.  இன்று காலையில்  போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது சென்னை எழும்பூரில் தேர்தல் பறக்கும் படையினரிடம் சிக்காமல் தான் ஓட்டி வந்த சொகுசு காரை வேகமாக ஓட்டிச்சென்றுள்ளர்.
 
இந்தக் காரை பின் தொடர்ந்து சென்ற போலீஸார், ஒரு இடத்தில் காரை மடக்கினர்.அதில் சோதனையிட்ட போது ரவுடி பினு உள்ளே இருப்பது தெரிந்தது. 
 
பின்னர் அவனை சுற்றி வளைத்த போலீஸார் பினுவை கைது செய்து எழும்பூர் காவல் நிலையத்திற்குக் கொண்டு சென்றனர். தற்போது ரவுடி பினுவிடம் விசாரணை நடத்தி வருவதாகத் தகவல் வெளியாகிறது.


இதில் மேலும் படிக்கவும் :