பொள்ளாச்சி விவகாரம்: நக்கீரன் கோபாலுக்கு சம்மன்

Last Updated: வியாழன், 14 மார்ச் 2019 (20:04 IST)
பொள்ளாச்சி பாலியல் விவகாரம் குறித்த செய்திகள் கடந்த ஒரு மாதமாக ஊடகங்களில் வந்து கொண்டிருந்தாலும் பத்தோடு பதினொன்றாவது பாலியல் குற்றமாகவே இந்த குற்றமும் பார்க்கப்பட்டது. ஆனால் நக்கீரனில் வெளிவந்த வீடியோவிற்கு பின்னர்தான் அரசியல்வாதிகள், திரையுலகினர், சமூக நல ஆர்வலர்கள், சமூக வலைத்தள பயனாளிகள் என அனைவரும் கொதித்தெழுந்தனர்.
திமுகவின் முழு ஆதரவாளரான நக்கீரன் கோபால், தேர்தல் நேரத்தில் வேண்டுமென்றே திமுகவுக்கு சாதகமாக இந்த விஷயம் அமைய வேண்டும் என்று திட்டமிட்டு வீடியோவை வெளியிட்டதாகவும் ஒருசிலர் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வீடியோவை நக்கீரனில் வெளியிட்டது தொடர்பாக விசாரணை செய்ய நக்கீரன் கோபாலுக்கு மத்திய குற்றப்பிரிவின் சைபர் கிரைம் பிரிவு சம்மன் அனுப்பியுள்ளது இந்த சம்மனை ஏற்று நக்கீரன் கோபால் மத்திய குற்றப்பிரிவின் சைபர் கிரைம் பிரிவு போலீசார் முன் ஆஜராவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்இதில் மேலும் படிக்கவும் :