ஏடிஎம் ஊழியர்களை தாக்கி கொள்ளை: சென்னை கல்லூரி மாணவி உள்பட 3 பேர் கைது

Last Modified வெள்ளி, 15 மார்ச் 2019 (09:14 IST)
சென்னை மதுரவாயல் அருகே கடந்த பிப்ரவரி மாதம் 8ஆம் தேதி ஏடிஎம் ஒன்றில் பணம் நிரப்பிக்கொண்டிருந்த ஊழியர்களை மர்ம நபர்கள் சிலர் மிரட்டி ரூ.10 லட்சத்தை கொள்ளையடித்து விட்டு மாயமாய் மறைந்தனர்.

இந்த ஏடிஎம் கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைத்து போலீசார் தேடி வந்த நிலையில் இந்த கொள்ளை தொடர்பாக இன்று மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் சென்னை கல்லூரி ஒன்றில் படித்து வரும் மாணவி என்பது திடுக்கிடும் செய்தி ஆகும்

இந்த கொள்ளை வழக்கில் நைஜீரியாவைச் சேர்ந்த அக்யோ மாயே, அமு மற்றும் சென்னை கல்லூரி மாணவி கிரியா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருவதாகவும் போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனஇதில் மேலும் படிக்கவும் :