வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 13 டிசம்பர் 2017 (19:44 IST)

காவல் நிலையம் முன் பிளேடால் கீறி ரவுடி தற்கொலை முயற்சி

விசாரணை என்ற பெயரில் போலீஸார் தன்னை துன்புறுத்துவதாக கூறி ரவுடி ஒருவர் தனது உடலை பிளேடால் கீறி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது.

 
சேத்தியாத்தோப்பு அருகே உள்ள பெரியகுப்பம் கிரமத்தை சேர்ந்த ஜான்பீட்டர்(59) என்பவர் மீது வழிப்பறி, கொள்ளை கஞ்சா விற்பனை போன்ற 20க்கும் மேற்பட்ட வழக்குகள் சேத்தித்தோப்பு மற்றும் பல்வேறு காவல் நிலையங்களில் உள்ளன. கடைசியாக ஜான்பீட்டர் கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளியே வந்த பின் திருந்தி வாழ முடிவு செய்தார்.
 
இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை சேத்தித்தோப்பு போலீஸார் ஜான்பீட்டர் வீட்டுக்குச் சென்று விசாரணைக்கு நாளை காவல் நிலையத்திற்கு வர வேண்டும் என கூறிவிட்டு சென்றுள்ளனர். அதன்படி ஜான்பீட்டர் இன்று காலை காவல் நிலையத்திற்கு ஜான்பீட்டர் சென்றார். 
 
அப்போது ஜான்பீட்டர் காவல் நிலையம் முன்பு தனது கையில் வைத்திருந்த பிளேடால் உடலில் கீறிக்கொண்டு தற்கொலைக்கு முயன்றார். இதில் அவரது உடலில் இருந்து ரத்தம் வெளியேறியது. இதைக்கண்ட அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் அவரை தடுக்க முயன்றனர்.
 
ஆனால் அவர் யாரை பக்கத்தில் விடவில்லை. நான் திருந்தி வாழ முடிவு செய்துள்ளேன். ஆனால் போலீசார் அடிக்கடி விசாரணை என்ற பெயரில் துன்புறுத்துகின்றனர். இதனால் தற்கொலை செய்ய முடிவெடுத்துள்ளேன் என கூறி பிளேடால் கீறி உள்ளார். 
 
இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் மற்ற காவலர்கள் ஜான்பீட்டரை தடுத்து அவரது கையில் இருந்த பிளேடை பிடுங்கினர். பின்னர் அவரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.