புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 18 செப்டம்பர் 2021 (10:56 IST)

தமிழகத்தின் புதிய ஆளுநராக பதவியேற்றார் ஆர்.என்.ரவி

ஆளுநர் மாளிகையில் தமிழ்நாட்டின் 26 ஆவது ஆளுநராக பதவியேற்றார் ஆர்.என்.ரவி. 
 
தமிழகத்தின் ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோகித் அவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் திடீரென பஞ்சாப் மாநிலத்திற்கு மாற்றப்பட்டார். எனவே, தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி என்பவர் நியமனம் செய்யப்பட்டார். 
 
இந்நிலையில் தமிழக ஆளுநராக ஆர்.என் ரவி பதவியேற்றுக்கொண்டார். ஆளுநர் மாளிகையில் ஆர்.என்.ரவிக்கு ஐகோர்ட் தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். ஆளுநர் பதவியேற்பு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்றனர்.