1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: சனி, 23 டிசம்பர் 2023 (21:00 IST)

பத்திரிகையாளர் மன்றத்தில் அரிசி - மளிகை பொருட்கள்- அமைச்சர் உதயநிதி

udhayanithi stalin
சென்னையில் பத்திரிகையாளர் சகோதரர்கள் 400 பேருக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் அரிசி - மளிகை பொருட்கள் ஆகியவற்றை மழைக்கால நிவாரணமாக இன்று வழங்கியுள்ளார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

சென்னை, திருவள்ளுவர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் மிக்ஜாம் புயல் பாதிப்பு  மற்றும் அதிகனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் சென்னை முழுவதும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு   நிவாரண உதவிகள் வழங்கி வருகிறது.

இந்த நிலையில், பத்திரிகையாளர் சகோதரர்கள் 400 பேருக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் அரிசி - மளிகை பொருட்கள் ஆகியவற்றை மழைக்கால நிவாரணமாக இன்று வழங்கியுள்ளார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:

‘’புயலோ - மழையோ - பெருந்தொற்றோ எந்தப் பேரிடர் என்றாலும் முதலில் களத்தில் நிற்பவர்கள் பத்திரிகை - ஊடகத்துறை நண்பர்கள். மிக்ஜாம் - கன மழை வெள்ள நேரத்திலும் உயிரைப் பணயம் வைத்து பணியாற்றினார்கள். அத்தகைய பத்திரிகையாளர் சகோதரர்கள் 400 பேருக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் அரிசி - மளிகை பொருட்கள் ஆகியவற்றை மழைக்கால நிவாரணமாக இன்று வழங்கினோம்.

பத்திரிகையாளர் நலனில் கழக அரசு என்றும் துணை நிற்கும் என்று உரையாற்றினோம்’’என்று தெரிவித்துள்ளார்.