திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: சனி, 16 டிசம்பர் 2023 (13:53 IST)

மிக்ஜாம் வெள்ள நிவாரணம்: முதல்வரிடம் இயக்குனர் அமீர் கொடுத்த தொகை..!

மிக்ஜாம் வெள்ள நிவாரணமாக இயக்குனர் அமீர் தமிழக முதல்வரிடம் கொடுத்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 
 
சமீபத்தில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் காரணமாக பெரும் சேதம் ஏற்பட்ட நிலையில் தொழிலதிபர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் தாராளமாக நிதி வழங்கி வருகின்றனர். 
 
சூர்யா கார்த்தி, சிவகார்த்திகேயன், விஷ்ணு விஷால், சூரி, வடிவேலு உள்பட பல திரையுலக பிரபலங்கள் அமைச்சர் உதயநிதியை சந்தித்து வெள்ள நிவாரண நிதி வழங்கினர். 
 
இந்த நிலையில் தற்போது மிக்ஜாம் புயல் வெள்ள நிவாரண பணிகளுக்காக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்த இயக்குனர் அமீர் 10 லட்சத்திற்கான காசோலையை வழங்கியுள்ளார். 
 
மற்ற திரையுலக பிரபலங்கள் அமைச்சர் உதயநிதியை சந்தித்து வெள்ள நிவாரண நிதி அளித்த நிலையில் இயக்குனர் அமீர் மட்டும் தமிழக முதல்வரிடம் நேரடியாக வெள்ள நிவாரண நிதி அளித்துள்ளார் என்பதை குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran