1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 14 பிப்ரவரி 2022 (07:33 IST)

திருப்புதல் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: விசாரணைக்கு உத்தரவு

10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று திருப்புதல் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த தேர்வின் கேள்வித்தாள்கள் கசிந்து விட்டதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திருப்புதல் தேர்தல் தேதியை சமீபத்தில் அறிவிக்கப்பட்டது என்பதும் இந்த நிலையில் திடீரென தேர்வு தாள்கள் கசிந்ததாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்தநிலையில் திருப்புதல் தேர்வு தேர்வுக்கான தேர்வு தாள்கள் கசிந்தது குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளதாகவும், இந்த விசாரணையின் முடிவில் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசு தேர்வுகள் இயக்குனர் சேதுராம வர்மா தெரிவித்துள்ளார் 
 
முதல்கட்டமாக திருவண்ணாமலையில் தான் 10ஆம் வகுப்பு 12ஆம் வகுப்பு தேர்வுக்கான வினாத்தாள் கசிந்ததாக கூறப்படுவது பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது இது குறித்து முழுமையான விசாரணை நடத்தினால் மட்டுமே உண்மை தெரியும் என பெற்றோர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்