வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Updated : வெள்ளி, 5 ஜூலை 2024 (15:25 IST)

100 ஆண்டுகள் செயல்பட்டு வந்த குதிரை பந்தய மைதானத்திற்கு சீல்: வருவாய்த்துறை அதிகாரிகள் அதிரடி..!

உதகை மத்திய பேருந்து நிலையம் அருகே 100 ஆண்டுக்கு மேல் செயல்பட்டு வந்த குதிரை பந்தய மைதானத்திற்கு வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
ரூ.822 கோடி குத்தகை பாக்கியை செலுத்தாததை அடுத்து நீதிமன்ற உத்தரவுப்படி சீல் வைக்கப்பட்டதாக தகவல்வெளியாகியுள்ளது.
 
குத்தகை காலம் 1978 உடன் முடிந்த நிலையில் அதன்பிறகு குத்தகை தொகையை செலுத்தாமல் மைதானம் இயங்கி வந்துள்ளதாகவும்,  அரசு நோட்டீஸ் அளித்தும் ரேஸ் கிளப் நிர்வாகம் குத்தகை பாக்கியை செலுத்தாததை அடுத்து 2006ல் வருவாய்த்துறை சார்பில் வழக்கு தொடரப்பட்டதாகவும் தெரிகிறது.
 
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் 2019ல் குதிரை பந்தய மைதானத்தை மீட்க உத்தரவிட்டது.  இதை அடுத்து உதகை கோட்டாட்சியர் மகாராஜா தலைமையில் அதிகாரிகள் 52.4 ஏக்கர் மைதானத்தை மீட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
Edited by Mahendran