திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 7 மே 2024 (14:53 IST)

சென்னை ஸ்பாக்களில் மசாஜ், பாலியல் தொழில்கள்.. சீல் வைத்த காவல்துறை அதிகாரிகள்..!

சென்னையின் பல்வேறு பகுதிகளில் உரிமம் இல்லாமல் இயங்கி வந்த ஸ்பாக்களுக்கு காவல்துறையினர் சீல் வைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.. 
 
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பல ஸ்பாக்கள் இயங்கி வருகிறது என்பதும் ஸ்பாக்கள் என்ற பெயரில் பாலியல் தொழில்கள் நடந்து வருவதாக பல குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது என்பதும் அவ்வப்போது ஸ்பாக்களில் காவல்துறையினர் அதிரடியாக சோதனை செய்து கைது நடவடிக்கையும் எடுத்து வருகின்றனர் என்பதையும் பார்த்து வருகிறோம். 
 
இந்த நிலையில் சென்னையில் உரிமை இல்லாமல் நடத்தப்படும் ஸ்பாக்களில் பாலியல் தொழில்கள் நடந்து வருவதாக கிடைத்த புகாரை அடித்து காவல்துறையினர் அதிரடியாக ஸ்பாக்களில் சோதனை செய்தனர். 
 
சென்னை கோயம்பேடு, அண்ணாநகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஸ்பாக்களில் சோதனை செய்தபோது உரிமம் இன்றி இயங்கி வந்த 55 ஸ்பாக்களுக்கு காவல்துறையினர் சீல் வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த ஸ்பாக்களின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் காவல்துறையினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. 
 
சென்னையில் உரிமம்  இல்லாமல் ஸ்பாக்கள் நடத்துவது சட்டப்படி குற்றம் என்றும் அதேபோல் ஸ்பாக்கள் என்ற பெயரில் பாலியல் தொழில் செய்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறையினர் எச்சரிக்கை எடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
Edited by Mahendran