செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 19 செப்டம்பர் 2022 (16:58 IST)

ஜெயலலிதாவின் உயிலை வெளியிடக்கோரி உண்ணாவிரதப் போராட்டம்: பெரும் பரபரப்பு

Jayalalitha
முன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் உயிலை வெளியிட கோரி உண்ணாவிரத போராட்டம் நடத்த அனுமதிக்க வேண்டும் என ஓய்வு பெற்ற அரசு ஊழியர் ஒருவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் மர்வமாக இருப்பதாக கூறப்படும் நிலையில் இது குறித்து விசாரணை செய்ய ஆறுமுகசாமி ஆணையம் அமைக்கப்பட்டது என்பதும் இந்த விசாரணை ஆணையம் விசாரணை செய்து அறிக்கை தமிழக அரசிடம் அளித்து உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் ஜெயலலிதாவின் உயிலை வெளியிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்து அவருடைய சமாதியில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப் போவதாகவும் அதற்கான அனுமதி கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓய்வுபெற்ற அரசு ஊழியர் ஒருவர் மனுதாக்கல் செய்துள்ளார்
 
மாங்காட்டு பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு ஊழியரான சௌந்தராஜன் என்பவர் மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் இது குறித்து பதிலளிக்க டிஜிபி மற்றும் சென்னை ஆணையருக்கு உத்தரவு போட்டு வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.