செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 19 செப்டம்பர் 2022 (09:40 IST)

மாணவிகள் வீடியோ விவகாரம்; போராட்டம் வாபஸ்! 6 நாட்கள் விடுமுறை!

Chandigarh University
சண்டிகர் பல்கலைகழகத்தில் மாணவிகள் குளிக்கும் வீடியோ வெளியானதாக வெடித்த போராட்டம் முடிவை எட்டியுள்ளது.

சண்டிகர் பல்கலைகழகத்தில் படித்து வரும் மாணவிகள் பலர் பெண்கள் விடுதியில் தங்கி படித்து வந்துள்ளனர். இந்நிலையில் அந்த விடுதியில் தங்கியிருந்த மாணவி ஒருவர் குளியலறையில் கேமரா வைத்து சக மாணவி குளிப்பதை வீடியோ எடுத்து அதை தனது ஆண் நண்பருக்கும் அனுப்பியதாக கண்டறியப்பட்டது.

இதை தொடர்ந்து அந்த மாணவி கைது செய்யப்பட்ட நிலையில் பல்கலைகழகத்தில் பொதுமக்கள் குவிந்து போராட்டத்தில் ஈடுபட தொடங்கினர். இடையே மாணவிகள் சிலர் தங்கள் வீடியோ வெளியாகிவிடுமோ என பயந்து தற்கொலைக்கு முயன்றதாக வதந்திகள் வெளியாகின. ஆனால் யாரும் தற்கொலைக்கு முயலவில்லை என காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.

குற்றவாளிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் அளித்து உறுதியை தொடர்ந்து பல்கலைகழகத்தில் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது. மேலும் பாதுகாப்பு காரணங்களுக்காக பல்கலைக்கழகம் 6 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.