செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 14 ஆகஸ்ட் 2020 (18:33 IST)

சுதந்திரம் பெரும் சென்னை!! குறைந்து வரும் கட்டுப்பாட்டு பகுதிகள்!

சென்னையில் கொரோனா காரணமாக கட்டுப்பாட்டிற்குள் இருந்த பகுதிகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. 
 
கடந்த மாதத்துடன் ஒப்பிடும் போது சென்னையில் கொரோனா தொற்று வெகுவாக குறைப்பட்டு வரும் நிலையில் சென்னையில் கொரோனா காரணமாக கட்டுப்பாட்டிற்குள் இருந்த பகுதிகளின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. 
 
தற்போது, ஒரு தெருவில் 5 நபர்களுக்கு மேல் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால் மட்டுமே அந்த பகுதி கட்டுப்பாடு பகுதியாக அறிவிக்கப்படுகிறது. அதன்படி தற்போது சென்னையில் மொத்தமுள்ள 15 மண்டலங்களில், 8 மண்டலங்களில் கட்டுப்பாட்டு பகுதிகளே இல்லை. 
 
அதிகபட்சமாக அண்ணாநகர், சோழிங்கநல்லூர், கோடம்பாக்கம், அம்பத்தூர், வளசரவாக்கம், அடையாறு, பெருங்குடி ஆகிய மண்டலங்களில் மட்டுமே 3 - 2 கட்டுபாட்டு பகுதிகள் உள்ளது.