தொடர்புடைய செய்திகள்
- அமெரிக்கா சென்ற சஞ்சய் தத் - உடல்நிலை பற்றி வெளியான தகவல் !
- அமெரிக்கா சென்ற சஞ்சய் தத் - உடல்நிலை பற்றி வெளியான தகவல் !
- மீரா மிதுன் கொலை மிரட்டல் விடுக்கிறார் – பிரபல நடிகை குற்றச்சாட்டு!
- மாஸ்டர் டிரைலர் அதிக டிஸ்லைக் வாங்கி சாதனைப் படைக்கும்! மீரா மிதுன் சர்ச்சை டிவிட்!
- கருப்பின வீரர்களுக்கு எதிராக பாகுபாடு காட்டினார் – கிரேம் ஸ்மித் மீது குற்றச்சாட்டு!
உள்துறை அமைச்சர் அமித்ஷா குணமானார்; மருத்துவமனை நிர்வாகம் அறிவிப்பு
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் டெல்லியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்ததால் அவர் அயோத்தியில் ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவில் கூட கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அமித்ஷா குணம் ஆகி விட்டதாக வதந்தி ஒன்று கிளம்பியது. பாஜக எம்பி மனோஜ் திவாரி தனது டுவிட்டரில் தவறான தகவலைத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் சற்று முன் வெளிவந்த உறுதி செய்யப்பட்ட தகவலின் படி மத்திய அமைச்சர் அமித்ஷா அவர்கள் கொரோனா நோயிலிருந்து முழுமையாக குணமடைந்தார் என்ற தகவல் வெளிவந்துள்ளது. அவருக்கு மூன்று முறை கொரோனா பரிசோதனை செய்ததில் மூன்றிலும் நெகட்டிவ் என்ற ரிசல்ட் வந்துள்ளதை அடுத்து அவர் முழுமையாக குணம் அடைந்து விட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் கொரோனாவில் இருந்து குணமாகியதை அடுத்து பாஜக தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர்
அடுத்த கட்டுரையில்
