செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 14 ஆகஸ்ட் 2020 (17:23 IST)

அமெரிக்கா சென்ற சஞ்சய் தத் - உடல்நிலை பற்றி வெளியான தகவல் !

பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவலை அடுத்து இப்போது அவர் நான்காம் கட்ட புற்றுநோய் என தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் சஞ்சய் தத் சிறையில் இருந்து விடுதலை ஆன பின்னர் வரிசையாக படங்களை நடித்து வந்தார். அந்த வகையில் சமீபத்தில் அவர் கே ஜி எப் படத்தில் வில்லனாக நடிக்க அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டு அவரது போஸ்டர்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. இந்நிலையில் நேற்று அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் மற்றும் நெஞ்சுவலி ஏற்பட மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து அவருக்கு கொரோன ரேபிட் சோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு நெகட்டிவ் என முடிவு வந்துள்ளது. இதையடுத்து அவர் ஒருநாள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் மீண்டும் வீட்டுக்கு சென்றார்.

இந்நிலையில் அவருக்கு மேற்கொண்ட சோதனையில் அவருக்கு நுரையீரல் புற்றுநோய் இருப்பதாக சொல்லப்படுகிறது. மேலும் சிகிச்சைக்காக அவர் அமெரிக்கா விரைவில் செல்லவிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால் இதுகுறித்து அதிகாரப்பூர்வமான செய்திகள் எதுவும் வெளியாகவில்லை. இந்நிலையில் நடிகர் சஞ்சய் தத் ‘மருத்துவ சிகிச்சைகள் மேற்கொள்ள வேண்டி இருப்பதால் சிறிதுகாலம் திரையுலகப் பணிகளில் இருந்து விலகி இருக்கிறேன். ரசிகர்கள் யாரும் கவலைப்பட வேண்டாம்.’ எனத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவரது மனைவி மான்யதா தத் வெளியிட்டுள்ள அறிவிப்பில் ‘சஞ்சுவின் உடல்நிலை குணமாக பிராத்தித்த அனைவருக்கும் நன்றி. இந்த கட்டத்தைக் கடக்க எங்களுக்கு வலிமையும் பிரார்த்தனைகளும் தேவை. ரசிகர்கள் ஆதாரமற்ற வதந்திகளை நம்பவேண்டாம். சஞ்சு எப்போதும் ஒரு போராளியாகவே வாழ்ந்து வந்துள்ளார், இந்த சவால்களை கடவுள் எங்களை மீண்டும் சோதிப்பதற்காகத் தேர்ந்தெடுத்துள்ளார்.எப்போதும் போல அவர் இதில் வெற்றி பெறுவார்’ எனத் தெரிவித்துள்ளார். மான்யதாவின் இந்த அறிக்கை சஞ்சய் தத்துக்கு புற்றுநோய் என்பதை உறுதிப் படுத்துவது போலவே அமைந்துள்ளது.

இந்நிலையில் அவருக்கு நான்காம் கட்ட புற்றுநோய் என்று இப்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. அதனால் அட்வான்ஸ்டு சிகிச்சைக்காக அவர் அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டுள்ளார் என்றும் சொல்லப்படுகிறது.