1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 12 ஜூன் 2021 (13:01 IST)

78 ஈழத்தமிழர்களை விடுதலை செய் - தமிழக அரசுக்கு கோரிக்கை

திருச்சி சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ள 78 ஈழத்தமிழர்களை விடுதலை செய்ய கோரி  தமிழக அரசுக்கு தமிழ் வழக்கறிஞர் பேரவை கோரிக்கை. 

 
தமிழ் வழக்கறிஞர் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் ஜான்சன் தனது அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் . அப்போது அவர் பேசுகையில் பல வருடங்களாக தமிழகம் முழுவதும் உள்ள  சிறப்பு  முகாம்களின்  ஈழத்தமிழர்கள்  சிறைக்காவலில் அடைத்து வைக்கப்பட்டுள்ளார்கள். 
 
அவர்களை உடனடியாக விடுதலை செய்யவும் அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்யவும் தமிழக அரசுக்கு  தமிழ் வழக்கறிஞர் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் தோ ம ஜான்சன் கோரிக்கை விடுத்துள்ளார்கள். 

மேலும் ஈழத் தமிழர்களே அகதிகளாகவே கருத வேண்டும் என்று அவர்களை ஒருபொழுதும் குற்றவாளிகளாக கருத வேண்டாம் எனவும் தமிழ் வழக்கறிஞர் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் கூறினார்.