திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 25 மே 2018 (17:50 IST)

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்: உச்ச நீதிமன்றத்தில் 28ம் தேதி விசாரணை

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் நடந்த தூப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியான சமப்வத்தின் மீது தொடரப்பட்ட பொதுநல மனு வரும் 28ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

 
 
ஸ்டெர்லைட் ஆலையை மூட கோரி தூத்துகுடியில் நடந்த  போராட்டத்தில்  போராட்டக்காரர்களை கலைக்க துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில் இதுவரை 13 பேர் பலியாகியுள்ளனர். மேலும், பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், இணையதள சேவைகள் முடக்கப்பட்ட நிலையில், தற்போது அங்கு நிலைமை வெகுவாக சீரடைந்து வருகிறது.
 
இந்த தூப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக மணி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் பொது நல மனு ஒன்று தாக்கல் செய்திருந்தார். அதில் தூப்பாக்கி சூடு தொடர்பான விசாரணையை உச்ச நீதிமன்றம் கண்காணிப்பில் சிபிஐ தலைமையில் நடத்தப்பட வேண்டும் என தெரிவித்திருந்தார்.
 
இந்த மனுவை இன்று அவசர வழக்காக விசாரித்த நீதிமன்றம். வரும் 28ம் தேதி இந்த வழக்கின் விசாரனையை ஒத்திவைத்துள்ளது.