வேளச்சேரி வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு: தேதி அறிவிப்பு

vote
வேளச்சேரி வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு: தேதி அறிவிப்பு
siva| Last Updated: செவ்வாய், 13 ஏப்ரல் 2021 (21:59 IST)
சென்னை வேளச்சேரியில் தொகுதியில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் மறு வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் சற்றுமுன் அறிவித்துள்ளது
சென்னை வேளச்சேரி வாக்குச்சாவடியில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி தேர்தல் நடைபெற்ற நிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்களை இருவர் இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது

இதுகுறித்து தேர்தல் ஆணையம் விசாரணை செய்து வந்த நிலையில் தற்போது ஏப்ரல் 17ஆம் தேதி அந்த வாக்குச்சாவடியில் மறு வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவித்துள்ளது. ஏப்ரல் 17ஆம் தேதி காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் அந்த வாக்குச்சாவடியில் உள்ள வாக்காளர்கள் மட்டும் மீண்டும் வாக்களிக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.இதில் மேலும் படிக்கவும் :