பத்திரிக்கையாளரை கைத்தடியால் தள்ளிய கமல்…. தொடங்கியது அடுத்த சர்ச்சை!

Last Modified புதன், 7 ஏப்ரல் 2021 (18:20 IST)

நடிகரும் அரசியல் வாதியுமான கமல்ஹாசன் பத்திரிக்கையாளர் ஒருவரை கைத்தடியை வைத்து தள்ளியது ஊடகத்தின் கண்டனங்களை பெற்றுள்ளது.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டதால கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக கோவையில் முகாமிட்டு பிரச்சாரம் மேற்கொண்டார். இந்நிலையில் இன்று கோவைக்கு சென்ற அவர் ஏற்கனவே காலில் அறுவை சிகிச்சை செய்துகொண்டுள்ளதால் கைத்தடியை ஊன்றி நடந்து சென்றார்.

அப்போது அவரை பத்திரிக்கையாளர் ஒருவர் புகைப்படம் எடுக்க முயல, அவரை தன் கைத்தடியால் கமல்ஹாசன் தள்ளியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது சம்மந்தமாக ஊடகத்தினர் கமல்ஹாசனுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.இதில் மேலும் படிக்கவும் :