திங்கள், 9 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 11 அக்டோபர் 2024 (15:08 IST)

சர்ச்சைக்குரிய காட்சியை நீக்க வேட்டையன் படக்குழு சம்மதம்… முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு தகவல்!

ரஜினிகாந்த் நடித்து த.செ.ஞானவேல் இயக்கத்தில், லைகா நிறுவனம் தயாரித்திருக்கும் வேட்டையன் படம் நேற்று ரிலீஸ் ஆனது. இந்த படத்தில்  ரஜினியுடன் அமிதாப் பச்சன், ராணா டகுபதி, மஞ்சு வாரியர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படம் கலவையான விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது.

இந்நிலையில் கோவில்பட்டி காந்தி நகரை சேர்ந்த அரசு பள்ளியின் பெயர் படத்தில் தவறாக சித்தரிக்கப்பட்டிருப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதுதொடர்பாக கோவில்பட்டியில் வேட்டையன் திரையிடப்பட்ட லெட்சுமி தியேட்டரை முற்றுகையிட்டு மக்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு எழுந்தது.

இதையடுத்து பரபரப்பான சூழல் உருவான நிலையில் சம்மந்தப்பட்ட காட்சியை நீக்க லைகா தயாரிப்பு நிர்வாகி சம்மதம் தெரிவித்துள்ளார் என முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். மேலும் சம்மந்தப்பட்ட பள்ளி 100 சதவீதம் மாணவர் தேர்ச்சி பெறும் பள்ளி எனவும் அவர் கூறியுள்ளார்.