செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 7 ஆகஸ்ட் 2020 (14:28 IST)

மும்மொழி கொள்கையை ஏற்றுக் கொண்டாரா அண்ணா! – பகீர் கிளப்பும் பாஜக!

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கைக்கு திமுக எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் திமுக நிறுவனரான அண்ணாவே இதை ஏற்றுக் கொள்ள தயாராக இருந்ததாக பாஜக தெரிவித்துள்ளது.

மத்திய அரசு வெளியிட்டுள்ள புதிய கல்விக் கொள்கைக்கு தமிழத்தில் எதிர்ப்பு எழுந்துள்ளது. பல்வேறு கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் முக்கியமாக புதிய கல்விக்கொள்கையில் உள்ள மும்மொழி திட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்தவே கூடாது என கூறி வருகின்றனர். இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தில் இருமொழி கொள்கையே தொடரும் என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தற்போது பாஜக மும்மொமி கொள்கைக்கு அண்ணா சம்மதம் தெரிவித்ததாக செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. 1967ல் டெல்லியில் நடைபெற்ற முதல்வர்கள் மாநாட்டிற்கு சென்ற அண்ணாவிடம் மும்மொழி திட்டம் குறித்து கேள்வியெழுப்பியபோது, அவர் “மற்ற மாநிலங்கள் அனைத்தும் இந்த திட்டத்தை ஏற்றுக் கொள்ள முன் வந்தால் தமிழகமும் தயார். ஏற்கனவே தமிழகத்தில் இந்தியில், மராத்தியில் பாடம் நடத்தும் பள்ளிகளும் உள்ளன” என கூறியதாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

அண்ணாவின் இந்த பதில் அப்போதைய கணையாழி பத்திரிக்கையில் வெளியானதாக தெரிவித்துள்ள தமிழக பாஜக, அண்ணா ஏற்றுக்கொண்ட ஒரு திட்டத்தைதான் திமுகவினரும், முக ஸ்டாலினும் அரசியல் செய்வதற்காக எதிர்த்து வருகின்றனர்” என கூறியுள்ளது.