வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sivalingam
Last Modified: வெள்ளி, 17 பிப்ரவரி 2017 (07:24 IST)

மூடப்படும் நிலையில் சசிகலா படித்த பள்ளி

தமிழக முதல்வராக வேண்டும் என்று தீவிரமாக முயற்சித்த சசிகலா, முதல்வராக நன்கு பணிபுரிந்து கொண்டிருந்த ஓபிஎஸ் அவர்களை மிரட்டி ராஜினாமா செய்துவிட்டு அரியணையில் ஏற முயற்சி செய்தார்.


ஆனால் கவர்னரின் தாமதம் காரணமாக தமிழகம் தப்பித்துவிட்டதாக கூறப்படுகிறது. தற்போது சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்று கம்பி எண்ணி கொண்டிருக்கும் சசிகலா எதுவரை படித்திருக்கின்றார், எந்த பள்ளியில் படித்தார் என்ற விபரம் தெரிய வந்துள்ளது.

5ஆம் வகுப்பு வரை பஞ்சாயத்து பள்ளியில் படித்த சசிகலா பின்னர் திருத்துறைபாண்டியில் உள்ள உயர்நிலைப் பள்ளி ஒன்றில் கடந்த 1965ஆம் ஆண்டு 6ஆம் வகுப்பில் சேர்ந்தார்,. பத்தாவது வரை அவர் படித்திருந்தாலும் பத்தாவதில் பாஸ் செய்யவில்லை. 1975ம் ஆண்டு தான் சசிகலா தன்னுடைய 10வது வகுப்பு  சான்றிதழை பெற்றுச் சென்றுள்ளார். அவர் படிக்கும் போது கிட்டத்தட்ட 2500 மாணவர்கள் இருந்த இந்த பள்ளியில் தற்போது வெறும் 250 பேர் மட்டுமே படித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

ஆசிரியர் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் வருடத்திற்கு வருடம் குறைந்து கொண்டே வருவதாகவும், 10ம் வகுப்பில் 57%, 12ம் வகுப்பில் 41% பேர் மட்டுமே பாஸ் ஆகி வருவதாகவும் கூறப்படுகிறது. இதே நிலையில் சென்றால் இந்த பள்ளி மிகவிரைவில் மூடக்கூடிய வாய்ப்பு இருப்பதாக அந்த பகுதியினர் கூறுகின்றனர்.