செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 12 ஜூலை 2022 (20:26 IST)

கொங்குநாடு மக்கள் கட்சியின் எம்பிக்கு அவமரியாதை: அண்ணாமலை கண்டனம்

chinraj
கொங்குநாடு மக்கள் கட்சியின் எம்பிக்கு அவமரியாதை: அண்ணாமலை கண்டனம்
திமுக கூட்டணியில் இருக்கும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் எம்பி சின்ராஜ் அவர்களுக்கு மரியாதை ஏற்பட்டதை அடுத்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் இதற்கு கண்டனம் தெரிவித்து உள்ளார். அவர் இது குறித்து கூறியிருப்பதாவது:
 
ஜனவரி மாதத்தில் காங்கிரஸ் MP ஜோதிமணி அவர்கள் திமுக அலுவலகத்திலிருந்து கட்டாயமாக வெளியேற்றப்பட்டார். நேற்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் MP திரு சின்ராஜ் அவர்கள் மரியாதையின்மையைச் சுட்டிக்காட்டி நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு முன்பு போராட்டத்தில் ஈடுபட்டார்
 
சுயமரியாதை பற்றி மற்றவர்களுக்குப் பாடம் எடுக்கும் இந்த அறிவாலயம் அரசு தனது கூட்டணியில் உள்ள கட்சியின் மக்கள் பிரதிநிதிகளுக்குக் கொடுக்க வேண்டிய மரியாதையை மட்டும் மறந்து விடுவார்கள் போல