”குறை கண்டுபித்து பெயர் வாங்குபவர் தான் ஸ்டாலின்”.. உதயகுமார் குற்றச்சாட்டு
பாட்டிலே குறை கண்டுபிடித்து பெயர் வாங்குபவர் தான் ஸ்டாலின் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றம் சாட்டியுள்ளார்.
இன்று செய்தியாளர்களை சந்தித்த வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், உள்ளாட்சி தேர்தலில் கட்சி அனுமதித்தால் போட்டியிடுவேன் என கூறியது தெரிந்த விஷயமே, திமுகவில் இருப்பது மன்னராட்சி, அதிமுகவில் இருப்பது ஜனநாயக ஆட்சி என கூறியுள்ளார்.
மேலும், ”பாட்டு எழுதி பெயர் வாங்குபவர்கள் இருக்கின்றனர். ஆனால் ஸ்டாலின் அந்த பாட்டில் குற்றம் சொல்லி பெயர் வாங்குபவர் எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.