செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 16 நவம்பர் 2019 (10:55 IST)

என்ன வெற்றிடம்? அதெல்லாம் எப்பவோ ஃபில் பண்ணியாச்சு: வைகோ!

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கருணாநிதி மறைவால் ஏற்பட்ட வெற்றிடத்தை ஸ்டாலின் நிரப்பிவிட்டார் என கூறியுள்ளார். 
 
தமிழகத்தில் தலைமைக்கான வெற்றிடம் இருப்பதாக நடிகர் ரஜினிகாந்த் சமீபத்தி தெரிவித்த நிலையில், இதனை மக்கள் நீதி மய்யம் தலைவரும் நடிகருமான கம்ல்ஹாசனும் இதை ஏற்றுக்கொண்டார். ஆனால், மற்ற அரசியல் கட்சியினர் இதை ஏற்றுக்கொள்வதாய் இல்லை. 
 
அதிமுகவினர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெற்றிடத்தை நிறப்பிவிட்டார் எனவும், திமுகவினர் ஸ்டாலின் வெற்றிடத்தை நிறப்பிவிட்டார் எனவும் தங்களது பங்குக்கு கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர். 
 
இந்நிலையில் இதே கருத்தையே மதிமுக பொதுச்செயலாளர் வைகோ முன்வைத்துள்ளார். அவர் கூறியதாவது, கருணாநிதி மறைவால் ஏற்பட்ட வெற்றிடத்தை ஸ்டாலின் நிரப்பிவிட்டார் என தெரிவித்துள்ளார். அதோடு, உள்ளாட்சி தேர்தலில் திமுகவுடன் கூட்டணி தொடரும் என்றும் அறிவித்துள்ளார்.