வெள்ளி, 11 அக்டோபர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: புதன், 2 அக்டோபர் 2024 (15:35 IST)

அமெரிக்கா விலிருந்து ஆலை கொண்டுவர முயற்சிக்கும் முதலமைச்சர்- அலங்காநல்லூர் சர்க்கரை ஆலையை திறக்க முயற்சிக்கவில்லைஆர் பி உதயகுமார் குற்றச்சாட்டு!

மதுரை புறநகர் மேற்கு மாவட்டம், வாடிபட்டி வடக்கு ஒன்றிய அ.தி.மு. க. சார்பாக,
கழக வளர்ச்சிப்
பணி, மக்களுக்கு ஆற்ற வேண்டிய பணிகள் பற்றிய ஆலோசனை கூட்டமானது வாடிப்பட்டி நடை பெற்றது.
 
இந்த கூட்டத்திற்கு, ஒன்றிய கழகச் செயளாலர் காளிதாஸ் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ.,க் கள்
மகேந்திரன்,
தமிழரசன்,
நீதிபதி, மாணிக்கம், கருப்பையா, 
எஸ் எஸ் சரவணன், மாநில நிர்வாகிகள் வெற்றிவேல், தனராஜன்,  ராஜேஸ்கண்ணா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
 
இந்த கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் எம்.வி. ராஜலட்சுமி,
சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் 
மாவட்ட கழக செயலாளர்  ஆர்.பி. உதயகுமார் ஆகியோர்கள் கலந்து கொண்டு உரையாற்றினர்.
 
அப்போது பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்;-
 
ஜனநாயகத்தை காப்பாற்றும் இயக்கமாக அதிமுக உள்ளது, இன்றைக்கு எடப்பாடியார் கழக ரீதியில் உள்ள 82 மாவட்டங்க 
ளில் கழக நிர்வாகிகளிடம் கருத்து பரிமாற்றத்தை கேட்டறிந்து, வலிமையான அடித்
தளத்தை உருவாக்
கியுள்ளர்.
உழைப்பவர்கள் யாராக இருந்தாலும், சிவப்பு 
கம்பளம் விரித்து எடப்பாடியார் வரவேற்பார். முதலமைச்சர் அமெரிக்கா சென்று ஆலையை கொண்டு வர முயற்சிக்கிறார்.
ஆனால், இங்கிருக்கும் அலங்காநல்லூர் சர்க்கரை ஆலையை
திறக்க முயற்சி செய்யவில்லை. 
 
அதிமுகவிற்கு அதை பற்றி பேச உரிமை உண்டு ஏனென்றால், அலங்காநல்லூர் சர்க்கரை ஆலை சீரமைக்க 24 கோடி வரை நாங்கள் வழங்கினோம், கார் ரேஸ் நடத்த பணம் உள்ளது. ஆனால், மக்களுக்காக திட்டங்களை துவக்க பணமில்லை.பொது வாழ்வில் உழைத்தால் யார் வேண்டும் என்றால், பதவிக்கு வரலாம்.
ஆனால், திமுகவில் அப்படி இல்லை வாரிசு அரசியல், குடும்ப அரசியல் இதனால் இன்றைக்கு ஜனநாயகத்துக்கு பேராபத்து வந்துவிட்டது .
நேற்று முன்தினம் சட்டமன்ற உறுப்பினர், நேற்று அமைச்சர், இன்று துணை முதலமைச்சர்,
நாளை முதல் அமைச்சர் என்று திரைப்பட பாணியில் செய்துள்ளனர்.
 
அதேபோல், எனக்கு துணையாக மட்டுமல்ல மக்களுக்கே உதயநிதி துணையாக இருப்பார்
என்று முதலமைச்சர் புது விளக்கத்தை அளிக்கிறார், இன்றைக்கு ஜனநாயகத்தை குழி தோண்டி புதைக்
கவைக்கும் வகையில்,
திமுக செயல்பாடு உள்ளது .
இன்றைக்கு பொன்முடிக்கு உயர் கல்வித் துறையில் இருந்து மாற்றம் செய்து வனத்துறை
ஒப்படைக்கப்
பட்டுள்ளது. 
இதன் ரகசியம் என்ன? ஏற்கனவே கவர்னர் மீது பொன்முடி அவ
மரியாதையாக,
இழிவாக பேசினார். இதனால், தனது மகன் பதவியேற்புக்கு ஆபத்து வந்து விடுமோ என்று கவர்னர் மனதை குளிர வைக்க துறையை மாற்றி உள்ளார். 
 
அதே போல், மனோ தங்கராஜ் அமைச்சர் பதவியை எடுத்துள்ளனர். இதே திமுக பாஜக அடிமை என்று எங்களை கூறினர், ஆனால் மோடியை 
பற்றி சமூக வலைதளத்தில் பல்வேறு கருத்துக்களை பரிமாறியதில் அவர் மீது கோபத்தில் இருந்தனர். அதனைத் தொடர்ந்து, முதலமைச்சர் தனது மகன் துணை முதலமைச்
சராக ஆசி பெற பிரதமரை சந்திக்க சென்றபோது, ஆண்டான் அடிமை போல் மத்திய அரசுக்கு அடிபணிந்து அவரை பதவியில் இருந்து எடுத்து விட்டனர்.
இன்றைக்கு பத்தாவது இடத்தில் இருந்த உதயநிதியை இரண்டாம் இடத்திற்கு கொண்டு செல்கின்றனர், நாளைக்கு முதல் இடத்திற்கு கொண்டு சென்று ஜனநாயகத்தை படுகொலை செய்வார்கள், மக்கள் இதை எளிதாக கடந்து போகக்
கூடாது.
ஆகவே, தற்போது ஜனநாயகத்தை காப்பாற்ற ஒரே வழி மீண்டும் எடப்பாடியார் தமிழகத்தில் முதலமைச்சர் வரவேண்டும். என்று பேசினார்.