ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 12 செப்டம்பர் 2022 (08:49 IST)

சைவ உணவகத்தில் வாங்கிய உணவில் எலித்தலை: திருவண்ணாமலையில் பரபரப்பு!

rat head
சைவ உணவகத்தில் வாங்கிய உணவில் எலித்தலை: திருவண்ணாமலையில் பரபரப்பு!
திருவண்ணாமலையில் உள்ள ஒரு சைவ ஓட்டலில் வாங்கிய உணவில் எலித்தலை இருந்ததால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி என்ற பகுதியில் சைவ உணவகம் ஒன்றில் துக்க நிகழ்ச்சிக்காக மொத்தமாக சாப்பாடு ஆர்டர் செய்து வாங்கப்பட்டது. இந்த உணவை பரிமாறிக் கொண்டிருந்த போது அதில் எலித்தலை இருந்தது தெரியவந்ததால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது
 
இதனை அடுத்து ஓட்டல் நிர்வாகத்தினர்களிடம் முறையிட்டபோது இருதரப்பிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது. இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்து உணவு வாங்கியவரகளை சமாதானம் செய்து அந்த உணவை உணவு பாதுகாப்பு அதிகாரிகளிடம் கொடுத்து பரிசோதனை செய்யுமாறு கேட்டுக் கொண்டனர்
 
சைவ உணவகத்தில் வாங்கிய உணவில் எலித்தலை இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது மற்றும்