1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified வெள்ளி, 9 செப்டம்பர் 2022 (12:01 IST)

நடிகை மர்மமாக இறந்த ஹோட்டல்; இடித்து தள்ளிய கோவா அரசு!

Demolish
பிரபல நடிகை சோனாலி போகத் உயிரிழந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட உணவகத்தை கோவா அரசு இடித்து தகர்த்தது.

நடிகையும் பாஜக பிரமுகருமான சோனாலி போகத் கோவாவில் உள்ள ஓட்டல் ஒன்றில் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதுகுறித்த விசாரணையில் தி கர்லீஸ் உணவக உரிமையாளரின் உதவியாளர் சோனாலி போகத்திற்கு மயக்க மருந்து கொடுத்ததாக தெரிய வந்தது. இந்த வழக்கில் தி கர்லீஸ் உணவக உரிமையாளர் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கோவாவின் அஞ்சுனா பகுதியில் உள்ள தி கர்லீஸ் உணவகம் கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ளதாக எழுந்த புகாரில் அந்த ஓட்டலை இடிக்கு கோவா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி இன்று அந்த ஓட்டல் முழுவதுமாக இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.