செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 30 மார்ச் 2021 (11:32 IST)

மன்னிப்பு கேட்டும் முடியல.. இந்திய தேர்தல் ஆணையம் வரை சென்ற ஆ.ராசா பிரச்சனை!

அ.ராசா விமர்சனம் தொடர்பான அறிக்கையை இந்திய தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது என தமிழக தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாஹூ தகவல். 

 
தனி நபர் விமர்சனம் தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிரானது என்பதால் அ.ராசா விமர்சனம் தொடர்பான அறிக்கையை இந்திய தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி இருப்பதாகவும் தமிழக தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.  தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
 
அப்போது பேசிய அவர்,  நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் 1,55,102 வாக்கு பதிவு இயந்திரங்கள், 1,14,205 கன்ரோட்  யூனிட், 1,20,807 விவி பேட் தயார் நிலையில் உள்ளதாக தெரிவித்தார். 80 வயதுக்கு மேற்பட்டோர், மாற்றறுதிறனாளிகளிடம் வீடு விடாக சென்று தபால் வாக்குகள் பெறும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கும் மையங்கள் அல்லது தபால் அலுவலங்களில் தபால் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.
 
அரசு அலுவலர்களுக்கு இதுவரை 1,85,057 பேருக்கு 12டி படிவம் வழங்கப்பட்டுள்ளதாகவும்,  இதில் 89,185 படிவங்கள் திரும்ப கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், இன்னும் 1,55,667 வழங்ப்பட உள்ளது வேண்டும் என தெரிவித்தார். தமிழகத்தில் 537 மிகவும் பதற்றமாவை வாக்குச்சாவடிகள், 10,813 பதற்றமான வாக்குச்சவாடிகள் கண்டறியப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 319.02 கோடி மதிப்பிலான பணம், தங்கம், வெள்ளி, மதுப்பானங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

வருமான வரித்துறையினால், 60.58 கோடி ரூபாய் கைப்பற்றபட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக சேலத்தில் 40.47 கோடியும், சென்னையில் 18.75 கோடியும், திருப்பூரில் 13.35 கோடியும் கைபற்றப்பட்டுள்ளது.  சிவிஜில் மூலம் இதுவரை  3464 புகார்கள் வந்துள்ளன. இதில், 2580 புகார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக கரூரில் 671 புகார்களும், கோவையில் 593 புகார்களும், திருப்பூரில் 244 புகார்களும், கன்னியாகுமரியில் 238 புகார்களும், சென்னையில் 193 புகார்களும் வந்துள்ளன. 
 
வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வினியோகிக்கும் பணி இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது.  புகார்கள் அதிகமாக வரக்கூடிய தொகுதிகளில் தேர்தலை  நிறுத்துவதோ, இல்லை அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக தேர்தல் ஆணையம் முடிவு செய்யும்.
 
அ.ராசா விமர்சித்தது குறித்த புகார் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர் அறிக்கையை இந்திய தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தனி நபர் விமர்சனம் தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிரானது. அதனால் திமுகவின் அ. ராசா விமர்சனம் தொடர்பான அறிக்கையை அனுப்பி இருப்பதாகவும் சாஹூ தெரிவித்தார்.