செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 16 ஏப்ரல் 2020 (10:06 IST)

இன்று மாலை இந்தியா வரும் ரேபிட் டெஸ்ட் கிட்டுகள்!!

இந்தியாவுக்கு இன்று மாலை 6.50 லட்சம் ரேபிட் டெஸ்ட் கிட்டுகள் வர உள்ளதாக தகவல். 
 
தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்தாலும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் ஒருபக்கம் கொரோனா பாதிப்பிலிருந்து குணமானவர்கள் எண்ணிக்கையும் கூடி வருகிறது. 
 
இந்நிலையில் கொரோனாவை விரைவாக கண்டறியும் "ரேபிட் டெஸ்ட்" கருவி வரவைக்கப்பட்டு விரைவாக சோதனை மேற்கொண்டு சிகிச்சை அளிக்கப்படும் என கூறியிருந்த நிலையில், கொரோனாவை விரைவாக கண்டறியும் "ரேபிட் டெஸ்ட்" கருவி இன்னும் இந்தியாவுக்கே வரவில்லை என்ற தகவல் வெளியாகியது.  
 
கொரோனா பாதிக்கப்பட்டவர்களை வெறும் 30 நிமிடத்தில் கன்டறிய இந்த  ரேபிட் டெஸ்ட் கிட்கள் பயன்படும். சீனாவில் இருந்து இந்தியாவுக்கு இன்று மாலை 6.50 லட்சம் ரேபிட் டெஸ்ட் கிட்டுகள் வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா பரிசோதனையை விரைவாக மேற்கொள்ள இந்தியாவுக்கு ரேபிட் டெஸ்ட் கிட்டுகள் வந்த பிறகு மாநிலங்களுக்கு அவை பிரித்துக்கொடுக்கப்படும் என தெரிகிறது.