செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 16 ஏப்ரல் 2020 (08:11 IST)

பிரபல நடிகரை விவாகரத்து செய்த பெண்ணின் சகோதரிக்கு கொரோனா?

பிரபல நடிகரை விவாகரத்து செய்த பெண்ணின் சகோதரிக்கு கொரோனா?
பிரபல பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷனை கடந்த 2014 ஆம் ஆண்டு விவாகரத்து செய்த சுசானே கான் என்ற பெண்ணின் சகோதரிக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது
 
சுசானே கானின் சகோதரி பரூக் கான் வீட்டில் வேலை செய்யும் ஊழியர் ஒருவருக்கு திடீரென கொரோனா பாசிட்டிவ் ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து அவருடைய குடும்பத்தில் உள்ள அனைவரும் தங்களை தாங்களை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர். அதுமட்டுமின்றி கொரோனா பரிசோதனை செய்யவும் முடிவு செய்துள்ளனர். இருப்பினும் அவர்கள் குடும்பத்தில் உள்ள யாருக்கும் கொரோனா வைரஸ் அறிகுறி கூட இருப்பதாக இதுவரை தெரியவில்லை என்றும் தனது வீட்டில் பணி செய்த ஒருவருக்கு கொரோனா பாதிப்பு என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
நகை வடிவமைப்பாளர் மற்றும் ஃபேஷன் டிசைனராக இருந்து வரும் பரூக் கானின் சகோதரி சுசானே கான், நடிகர் ஹிருத்திக் ரோஷனை திருமணம் செய்து 14 ஆண்டுகளுக்கு பின் விவாகரத்து செய்தவர் என்பதும் விவாகரத்து பெற்றாலும் சமீபத்தில் ஊரடங்கால் தனது மகன் தனிமையில் இருப்பதை அறிந்து ஹிருத்திக் ரோஷன் வீட்டிற்கு சென்று தனது மகனை கவனித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.