சென்னை உள்பட 3 மாவட்டங்களில் 3 மணி நேரத்தில் மழை: வானிலை அறிவிப்பு
சென்னை உள்பட மூன்று மாவட்டங்களில் இன்னும் மூன்று மணி நேரத்தில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை தற்போது தீவிரமடைந்துள்ளதை அடுத்து சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்
அந்த வகையில் சென்னை ராணிப்பேட்டை மற்றும் திருவள்ளூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் இன்னும் மூன்று மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது முற்றிலும் வலுவிழந்துவிட்டதாகவும் இதனை அடுத்து ஒரு சில மாவட்டங்களில் மழை பெய்யும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் இன்று மழை பெய்யும் என்று கூறப்பட்டிருப்பதை அடுத்து பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.
Edited by Siva